ராசி மணல் அணை கட்ட பரிசீலினை முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறேன்: பி.ஆர்.பாண்டியன்

ராசி மணல் அணை கட்ட பரிசீலினை முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறேன்: பி.ஆர்.பாண்டியன்
தமிழக அரசு நதிகள் சீரமைப்பு மேம்பாட்டு கழகம் ஏற்படுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டுக் கழக வழிகாட்டு முறைகளை பின்பற்றி அரசானை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

சாலை சீரமைப்பு பணிகளில் மேம்பாட் டுக் கழகம் என்ற பெயரில் உலக பெரு முதலாளிகளை அனுமதித்து அவர்களின் முதலீட்டில் சாலைகள் அமைத்து விருப்பத்திற்கு சுங்க வரிவிதித்து சேவை என்ற நிலை மாறி வணிக ரீதியில் பெரும் வருவாயை ஈட்டும் தொழிலாக மாறி வாகன உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு போராட்டக்களத்தில் ஈடுபட்டள்ளனர்.

இந்நிலையில் இதனை பின்பற்றி ஆறுகள் சீரமைப்பு மேம்பாட்டுக் கழகம் அமைக்க அரசானை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பாசனத்துறையில் தனியாரை அனுமதித்தால் மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியாது, பாசன விதிமுறைகள் மீறப்படும். விருப்பத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கக் கூடும், விவசாயிகளின் பாசன உரிமைகள் பறிப்போகும், பாசன கட்டமைப்புகள் அடியோடு அழிந்து விவசாயம், பாசனம் பாதிக்கப்படும் என வே பாதிப்புகளை உணர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசானையை ரத்து செய்து, பாசனத்திற்க்கென தனித்துறையை ஏற்படுத்த வேண்டும்.

காவிரியின் குறுக்கே ராசி மணல் அனை கட்டுவது குறித்து தமிழக அரசின் பரிசீலினையில் உள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

மேகதாட்டு அனைகட்ட தமிழகம் மறுப்பது சட்டத்திற்குட்பட்டது. அதோடு ராசி மணல் அனை கட்டுவதை இணைத்து பேசுவது பொருத்தமற்றது.

காரணம் கர்நாடக மாநிலத்திற்க்கு கீழே தமிழகம் நோக்கி செல்லும் தண்ணீரை  தனது எல்லையின் இறுதிப் பகுதியில் கர்நாடகம் அனைகட்ட முடியாது எனவும் தமிழகம் வழியாக செல்லும் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து அனைகட்டி பயன் படுத்திக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது. மத்தி யஅரசின் வனத்துறையிடம் மட்டும் தான் அனுமதி பெற வேண்டும். இதனை நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மேல் முறையீட்டு அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத் தால் முடித்து வைக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டப் பிறகு தமிழகம் வழியே ஓடும் தண்ணீரை புதிய திட்டங்கள் மூலம்  பயன்படுத்திக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. 

எனவே தான் கர்நாடகம் தனது எல்லையின் இறுதியில் தமிழக எல்லை முகப்பில் அனைகட்டி தடுக்க தனக்கு சட்ட படியான உரிமை இல்லை என்பதை உணர்ந்து தான், தமிழகம் உபரி நீரை தடுக்க தவறிவிட்டதாகவும், மேட்டூர் அனைக்கு கீழ் பகுதி வங்கக் கடல் வரை சமதல விளை நிலப்பகுதி என்பதால் தமிழகத்தில் அனைக் கட்ட முடியவில்லை என்றும் எனவே மோதாட்டுவில் அனைகட்டி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை விடுவிப்பதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குறிப்பிடுவதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

இதனை  தமிழக முதலமைச்சர் உணர வேண்டும். கர்நாடகாவின் எல்லைக்கு கீழ் (மே கதாட்டு) நோக்கி ஒக்கேனக்கல் வரை ஓடி வரும் சுமார் 62 கிமீ காவிரி ஆறுமுழுமையும் தமிழகத்திற்கு சொந்தம்.எனவே ராசி மணல் மட்டும் தான் மலைக்குன்றுகளுக்கிடையே தமிழகம் அனைகட்ட உகந்த  இடம். இதனை கர்நாடகம் மறுப்பதற்கு முடியாது, அவர் களிடம் அனுமதி கேட்கவும் தேவையில்லை.

ஏற்கனவே ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள்  துவக்கப்பட்ட போது  கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்த போது அதனை சட்டவிரோதமானது என்று எடுத்துக் கூறி தமிழக அரசு உரிமையை உறுதி செய்துள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன். 

எனவே மத்திய அரசு வனத்துறை அனுமதியை பெற்று ராசி மணல் அனை கட்டுமானப் பணியினை உடன் துவக்கிட தமிழக அரசை உடன் வலியுறுத்துகிறேன் 

நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுநர் என்று பொது வெளியிலும், பத்திரிக்கை, ஊடகங்களிலும் வெளிப்படையான கருத்துகளை வெளியிட துவங்கினாரோ அன்றுல் அவரும் பத்திரிக்கை, ஊடக விமர்சனங்களக்குட்டவரே. ஆனால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் பெற வேண்டும் காவல்துறை மூலம் அடக்கு முறை கையால்வது பத்திரிக்கை சுதந்திரம் பறிபோகும். உண்மைக்கு புறம்பான செய்தி என்றால் நீதிமன்றம் மூலம் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.

சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், சென்னை மாவட்ட செயலாளர் தி நகர் கோபிநாத் நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

பாரத ரத்னா ராஜீவ்காந்தி பிறந்தநாள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இன்று 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ரா
ஜீவ்காந்தி அவர்களின் திருவுருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள்மாலை அணிவித்தார். மேலும் 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டியின் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் அனைவரும் மதநல்லிணக்கஉறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ராஜீவ்காந்தி பஞ்சாயத்தது ராஜ் சங்கதன் சார்பில்
ராஜிவ்காந்தியின் கனவு திட்டமான பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேறி தமிழக அரசினை உடனேஉள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி அதன் தலைவர் திரு. செங்கம் ஜி. குமார் அவர்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கையெழுத்தை தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவின் (Pசழகநளளழையெட ஊழபெசநளள) தென்மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி கீதா ரெட்டி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் டாக்டர் குமரிஅனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி, மாநில தேர்தல் அதிகாரி திரு.பாபிராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரு. எஸ். பீட்டர்அல்போன்ஸ், திரு. பி. விஸ்வநாதன், திருமதி.கே.ராணி, திருமதி.டி. யசோதா, திரு. உ.பலராமன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு.கே. தணிகாசலம், திரு. கே. சிரஞ்சீவி, திரு. டி. செல்வம், திரு. அருள்பெத்தையா, திரு. ஆர். தாமோதரன், திரு. கீழானூர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் திரு. கராத்தே தியாகராஜன், திரு. எம்.எஸ். திரவியம், திரு. வீரபாண்டியன், திரு. சிவராஜசேகரன், அணித் தலைவர்கள்; திரு. செல்வப்பெருந்தகை, திருமதி. ஜான்சிராணி மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மேற்கண்ட இச்செய்தியினை தங்களின்  மேலான பத்திரிகைகளில் பிரசுரித்து உதவுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் அன்புள்ள,

(அ.கோபண்ணா)

இரு நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம்

 மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி  பாட்டாளி மக்கள் கட்சி  சார்பில் அதன் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ளும் இரு நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேட்டூர் அணையில் இன்று காலை தொடங்கியது.  மருத்துவர் அன்புமணி இராமதாசின் பயணத்தை பா.ம.க. த
லைவர் ஜி.கே.மணி மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்

தொடரும் மீனவர் துயரம் " கருத்தரங்கில் பேசியோர் காணொளி மற்றும் தீர்மானங்கள்


அறிவாயுதம் நடத்தும் " தொடரும் மீனவர் துயரம் " கருத்தரங்கில் தீர்மானங்களை விளக்கி ஊடகவியலாளர்களை நீதியரசர் அரிபரந்தாமன் தலைமையில் சந்திப்பு...
உடன் தோழர் சுப.உதயக்குமார், திரு.அய்யநாதன் , பேராசிரியர் இராமு.மணிவண்ணன்,அறிவாயுதம் நெறியாளர் ந.விசுவநாதன் , அறிவாயுதம் சிறப்பாசிரியர்
தோழர் கே.ஆர்.எஸ்.மணி, திரு.ஜி.ஆர்.அப்பாராஜ் ( தலைவர்- சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்
திரு.எமிரிட் ( இராமேஸ்வரம் மீனவர் சங்கம் )
இயக்குநர் வ.கௌதமன், திரு.சரவணராஜா பொன்னுசாமி மற்றும் தோழர் இரவிக்குமார் உள்ளிட்டோர்....

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

 உலகச் சுற்றுச்சூழல் நாள்: 
குப்பையில்லா 
மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்!

 உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில்  ஜூன் 5-ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'இயற்கையோடு மக்களை இணைப்போம்' என்கிற முழக்கத்தை ஐநா அவை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக முன் வைத்துள்ளது. இதே நாளில் இந்தியாவின் நகர்ப்புற திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்கிற பிரச்சாரத்தை இந்திய அரசு தொடங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

 மக்கள் குப்பையை வகை பிரித்து அளிப்பதன் மூலமும், நகராட்சிகள் மக்களிடம் குப்பையை தரம் பிரித்து பெற்று அவற்றை மறுசுழற்சி செய்தல் மற்றும் மக்க வைப்பதன் மூலமும் - நகரங்களின் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் திட்டத்தை இந்திய அரசு இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் நாள் முதல் செயல்படுத்துகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமானோர் நகரங்களில் வாழும் மாநிலம் தமிழ்நாடு. தமிழக மக்களில் சரிபாதி அளவுக்கும் கூடுதலான மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இந்தியாவிலேயே தனிநபர் அளவில் அதிக குப்பையை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்திய மாநகரங்களில் அதிக குப்பையை உருவாக்கும் மாநகரம் சென்னை. குப்பை மேலாண்மையில் இந்திய பெருநகரங்களில் கடைசி இடத்தில் இருப்பதும் சென்னை தான். எனவே, குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு அதிகம் இருக்கிறது.

குப்பை பிரச்சினைக்கு முறையாக தீர்வு காண வேண்டும் என்பது 8.3.2016 ஆம் நாள் வெளியிடப்பட்ட இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கட்டாயம் ஆகும். இதனை செயலாக்குவதற்கான ஓராண்டு  காலக்கெடு ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. இந்த விதிகள் அனைத்தையும் 1.6.2017 முதல் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்திய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே 22.12.2016 ஆம் நாள் உத்தரவிட்டுள்ளது.  இதே போன்று பிளாஸ்டிக் குப்பை, மின்னணுக் கழிவுகள், கட்டடக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், ஆபத்தான கழிவுகள் அனைத்துக்கும் தனி விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. கழிவு மேலாண்மை குறித்த அனைத்து விதிகளையும் தமிழ்நாடு அரசும் தமிழகத்தின் அனைத்து நகராட்சி அமைப்புகளும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழக நகரங்களின் குப்பை சிக்கலுக்கு உடனடியாக முழுமையான தீர்வுகாண வேண்டும்.

குப்பை ஒரு சுகாதார பேராபத்து ஆகும். மனிதர்களை தாக்கும் 25% நோய்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடுதான் காரணம். குப்பை பாதிப்பால் 22 வகையான நோய்கள் தாக்குகின்றன. தொண்டை மற்றும் மூக்கு தொற்றுநோய்கள், மூச்சுத்திணறல், எரிச்சல், பாக்டீரியா தொற்று, நோய் எதிர்ப்புசக்தி குறைதல், ஒவ்வாமை, ஆஸ்துமா என ஏராளமான நோய்களுக்கு குப்பை காரணமாகிறது. தண்ணீரில் கலக்கும் குப்பையால் காலரா, வயிற்றுப்போக்கு, மஞ்சல் காமாலை, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் தாக்குகின்றன. தூக்கி எறியப்படும் டயர், குவளை, தேங்காய் ஓடு உள்ளிட்ட பொருட்களில் தேங்கும் நன்னீரில் இருந்து - டெங்கு, சிக்குன் குனியா நோய் பரப்பும் கொசு உருவாகிறது. கரப்பான் பூச்சி, ஈக்கள் தொல்லை, பலவிதமான பூச்சிகள், பெருச்சாளி போன்ற தொல்லைகளுக்கு குப்பையே காரணம்.

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரை பெருவெள்ளம் தாக்கியதற்கு குப்பை ஒரு முதன்மைக் காரணம் ஆகும். மழை நீர் வடிகால் வழிகளிலும் சாக்கடைகளிலும் குப்பை அடைத்துக் கொண்டதால் வெள்ள பாதிப்பு அதிகமானது. குப்பை நீர்வளத்தை கெடுக்கிறது. ஆறுகள், ஓடைகள், குளங்கள், ஏரிகள் மாசுபட குப்பையே காரணம். இதனால் நன்னீரும், நிலத்தடி நீரும் நஞ்சாகிறது. கடலை சென்றடையும் குப்பையால் கடல் வளம் அழிகிறது. குப்பையை எரிப்பதால்  வெளிவரும் கரியமில வாயு புவியை வெப்படையச் செய்கிறது. மீத்தேன் வாயு அதைவிட மோசமானதாகும். குப்பையிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயு கரியமில வாயுவை விட 86 மடங்கு கூடுதலாக பூமியை சூடக்குகிறது.

 குப்பையை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சுவாயுக்கள் காற்றில் கலக்கின்றன. டையாக்சின் மற்றும் ஃபியூரான், நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஹெக்சா குளோரோ பென்சீன் - என பலவிதமான வாயுக்கள் வெளியாகின்றன. குரோமியம், ஆர்சனிக் அடங்கிய சாம்பலும் உருவாகிறது. அதிகரிக்கும் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை குறைபாடுகளுக்கு குப்பை எரிப்பும் ஒரு முதன்மைக் காரணம் ஆகும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா, இருதய நோய்கள் என பலக் கேடுகளுக்கு குப்பை எரிப்பு காரணமாகும். இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிப்படைகின்றனர்.

 எனவே, ஜீன் 5, உலக சுற்றுச்சூழல் நாள் முதல் தமிழநாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் குறைந்த பட்சமாக "ஈரக் கழிவு, உலர் கழிவு" என இருவகையாக குப்பையை வகை பிரிக்க வேண்டும். ஈரக் கழிவுகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். உலர் கழிவுளை  நீல நிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பிரிக்கப்பட்ட குப்பையை நகராட்சியிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பாளரிடமோ அளிக்க வேண்டும். வீடுகளில் வகை பிரிக்கப்பட்ட குப்பையை வீடுவீடாக சென்று சேகரிக்க நகராட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை என வகையாக பிரித்து தாங்களே குப்பையை மேலாண்மை செய்ய வேண்டும் அல்லது நகராட்சியிடம் அளிக்க வேண்டும்.

 நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தையும் குப்பை மேட்டில் கொட்டுவது சட்டப்படி குற்றம். மட்கும் குப்பையை தனியே பிரித்து மட்க வைக்க வேண்டும். மறுசுழற்சிக்கு உகந்தவற்றை தனியே பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும். எதற்குமே பயன்படாத குப்பையை மட்டுமே குப்பை மேட்டில் கொட்டி, விதிமுறைப்படி பராமரிக்க வேண்டும். நீர் நிலைகள், வடிகால்கள், பொது இடங்கள், சாலைகள் என எந்த ஒரு இடத்திலும் குப்பையை தூக்கி எறிவதும், புதைப்பதும், எரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இத்தகையை விதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசும் தமிழகத்தின் அனைத்து நகராட்சி அமைப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டினை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் நாளில் அனைவரும் இதற்காக உறுதி எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

கலைஞருக்கு நோபல் பரிசும், மத்திய அரசு பாரத ரத்னாவும் வழங்க வேண்டும் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்


தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய 94-வது பிறந்தநாள் விழாவும், 60 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து தமிழ்சமுதாயத்திற்கு பணியாற்றிக்கொண்டிருக்கிற சேவையை போற்றுகின்ற வைர விழாவை இணைத்து இந்த அருமையான அரங்கத்தை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கிற பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராக விளங்கக்கூடிய நமது பேரன்புக்குரிய பேராசிரியர் அவர்களே! விழாவிற்கு முன்னிலை வகிக்கும் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! இங்கே சிறப்பாக வருகை தந்து விழாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்ற அருமை  ராகுல் ஜி அவர்களே! இங்கு வருகை தந்திருக்கின்ற நிதிஷ் குமார் அவர்களே! மற்றும் மேடையில் வீற்றிருக்கின்ற அனைத்து கட்சிகளுடைய அன்புக்குரிய சகோதரர்களே! திரளாக கூடியிருக்கின்ற பெரியோர்களே! அருமை சகோதர சகோதரிகளே! கலைஞர் அவர்களை பற்றி அவர்களோடு நாங்கள் கொண்டிருக்கிற உறவுவை பற்றி சிறுபான்மை முஸ்லிம் மக்களோடு, அவர் கொண்டிருக்கிற அன்பை பற்றி சமுதாயத்திற்கு ஆற்றியிருக்கின்ற பணியை பற்றி திராவிட முன்னேற்ற கழகமும், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயமும், மற்றுமுள்ள சிறுபான்மை இயக்கங்களும், சமுதாயங்களும் எவ்வளவு உள்ளப்பூர்வமாக உணர்வுப்பூர்வமாக உறவு கொண்டிருக்கிற என்பது பற்றியும் நீண்ட நெடிய உரையாற்றக்கூடிய தருணம் இது இல்லை. 

கலைஞர் 94 வயதை எட்டி இனியும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்ற வாழ்த்தரங்கம் இது. கலைஞரை பற்றி இங்கு பேசிய பெரியவர்கள் 
அருமையான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அவர் மாநில சுயாட்சியை நிலைநிறுத்த பாடுபட்டவர். தமிழ் நாட்டுடைய பாரம்பரியத்தை, பண்பாட்டை, நிலைநிறுத்திய பெருமைக்குரியவர். சமூக நீதியை காத்த மகாதலைவர். தமிழ்நாட்டிலே அவர் ஆற்றிய பணிகள் தமிழ்நாட்டு மக்களாலேயே ஏற்றுக் கொள்ளப் பட்டது மட்டுமல்லாமல் இந்திய அளவிலே அவரை உயர்த்தியிருக்கிறது.  தேசிய தலைவராக உயர்ந்திருக்கிறார். இந்த கருத்துக்களை யெல்லாம் உள்ளடக்கி இங்கே சொன்னார்கள். பீகார் முதலமைச்சர்  நிதிஷ் குமார் ஜி அவர்கள் இங்கே பேசுகிற பொழுது வரக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான ஆட்சி தளபதி மு.க. ஸ்டாலின் விரைவில் முதலமைச்சர் ஆவார் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இங்கே செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் மேடை அமைத்திருக்கிறார்கள்.  ஆக கோட்டைக்குள்ளே நீங்கள் பார்க்கும் போது இது இந்த அமைப்பை எடுத்துக்காட்டுகிறது.  

அடுத்து திராவிட முன்னேற்ற கழகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் நுழையப்போகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இங்கே ஒன்றை நான் நினைவுப்படுத்த வேண்டும்.  
1980-ல் ஆண்டில் தமிழகத்திலே காலடி வைத்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை """"நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! """" என்று கலைஞர் சொன்னார்.  அவர் சொன்னது நடந்தது. 2004-ஆம் ஆண்டு """"இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவுக்கு நல்லாட்சி தருக!"" என்று அவர் சொன்னார். அது நடந்தது.
 
அதனுடைய விளைவாக மத்தியில் அற்புதமான 10 ஆண்டு ஆட்சி, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும், செல்வ செழிப்போடு வளர்வதற்கான வாய்ப்பை அந்த ஆட்சி உருவாக்கி தந்தது. ஆனால் இப்பொழுது நிதிஷ் குமார் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமர்ந்து  முதலமைச்சராக வரப்போகிறார் என்றார். இதே மேடையில் கலைஞர் அவர்கள் வீற்றிருப்பாராரேயானால் நிச்சயமாக ஒன்றை சொல்லியிருப்பார். ராகுல் ஜியே ராகுல் ஜியே செங்கோட்டைக்கு நீங்கள் செல்லுங்கள். வருகிற ஆட்சியை வெல்லுங்கள் என்று நிச்சயமாக சொல்லியிருப்பார். அதையே நாங்களும் உங்கள் சார்பாக சொல்ல விரும்புகிறோம். 

ஆக இந்த தமிழகத்திலே அற்புதமான ஒரு மாமனிதர் கலைஞர் அவரை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் கிடையாது.  துரைமுருகன் சொன்னது போல அவரை பற்றி காலமெல்லாம் பேசிக்கொண்டிருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் எங்களிடத்திலே உண்டு. அவரோடு பழகியது, பேசிய அனுபவங்கள், அவர் இட்ட கட்டளையை ஏற்று, அதன்படி நடந்தது, நாட்டிலேவே ஏற் பட்டிருக்கிற எண்ணற்ற மாற்றங்களை பற்றி எல்லாம் நாங்கள் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கிறக் கக்கூடியவர்கள். ஆகவே நான் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.  மூன்று விஷயங்களை மட்டும் சொல்லி முடிவு செய்கிறேன்.

ஒன்று இந்திய அரசு இன்றைய தினம் கட்டுத்தறி இல்லாத காட்டு மிராண்டிதனத்தை நோக்கி சென்று கொண்டிருக் கிறது. 
மத்தியிலே ஆளக்கூடிய அரசு அதற்குரிய வரம்பு களையெல்லாம் மீறி வரம்பற்ற ஆட்சிக்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்த வரம்பற்ற ஆட்சியை கடிவாளம் போட வேண்டிய கடமை தமிழகத்துக்கு உண்டு. அதற்கு வழிகாட்டியாக அமைந்தவர் டாக்டர் கலைஞர். அவர் தான் தமிழகத்தில் முதல்முறையாக மாநில சுயாட்சி உரிமைக்காக கமிஷன் அமைத்து இந்தியாவிலே யாரும் செய்யாத காரியத்தை செய்தார்கள். மாநில உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற போது தான் இந்தியாவுக்கு பெருமை வந்து சேரும் என்று சொன்னார்கள். 
அந்த அடிப்படையில் இன்றைய தினம் மாட்டிறைச்சி விஷயத்திலும், நீட் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் யாரை பிற்படுத்தப்பட்ட மக்கள்(க்ஷயஉமறயசன உடயளள)  என்று நிர்ணயிக்கின்ற உரிமையை இதுவரை ஒவ்வொரு மாநிலமும் செய்தது. இப்போது மத்திய அரசு தானே செய்ய விரும்புகிறது. கல்வித்துறையை மாநிலம் இதுவரை செய்து வந்தது. 

அந்த உரிமையை இன்று மத்திய அரசு பறிக்கிறது. அதே மாதிரி ஆடு, மாடு போன்றவற்றில் மாநில உரிமை இதுவரை நிலைநிறுத்தப்பட்டு வந்தது. அதனை இன்று மத்திய அரசு பறிக்கிறது. இப்படி பறிக்கக்கூடிய நிலையில் உள்ள மத்திய அரசை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி இங்கு இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, சிவா பாராளுமன்றத்திலே மாநில உரிமையை பாதுகாக்கக் கூடிய ( ளுவயவநசபைhவள க்ஷடைட) ஒன்றைகொண்டு வரவேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன். 

அந்த பில்லின் அடிப்படையில் உள்ள எந்த ஒரு சப்ஜெட் பற்றிய பில்லையும் மத்திய அரசு முடிவு செய்தால் ஒவ்வொரு மாநிலமும் அதனுடைய சட்டமன்றத்திலே நான்கில் மூன்று பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனுமதி கொடுத்த பிறகு தான் அந்த சட்ட சீர்திருத்தத்தை கொண்டுவந்து  நிறைவேற்ற வேண்டும் அந்த அடிப்டையில் தான் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய அனைவரும் அதனை செய்ய வேண்டும் என்று பணிவன்புபோடு கேட்டுக்கொள்கிறேன்.  
அடுத்து கலைஞர் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கக்கூடிய நிலை.அவருடைய ஆற்றல், அறிவு, இலக்கிய சேவை, தமிழுக்கு செய்திருக்கிற தொண்டு, அவருக்கு ஈடாக ஒப்பாக உவமை சொல்லக்கூடிய ஒருவரும் உலகத்திலே இல்லை. இந்த நூற்றாண்டிலே இல்லை. இது எத்தனை நுற்றாண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு தலைவர் வருவார் என்று சொல்வதற்கு இல்லை. அப்படி பட்ட ஒரு தலைவருக்கு உலக அளவிலே நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்று ஆசிக்கிறேன். 
அதற்கு முன்னதாக இந்தியாவிலே உள்ள பாரத ரத்னா என்கின்ற அந்த பட்டத்தை மத்திய அரசு உடனடியாக வழங்கி இதுவரை தமிழகத்துக்கு செய்து வந்த துரோகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். 
அதோடு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சி தலைவர்களின் முன்னிலையில் நான் வைக்கிறேன். கலைஞர் வலதும், இடதும் இல்லாமல் மனிதநேயத்தோடு இருப்பவர். அந்த மனிதநேயத்தின் அடிப்படையில் தான் தமிழ் இலக்கியத்தின் மூலம், தொல்காப்பியம், சங்கத்தமிழ், திருக்குறள் ஆகியவைகள் மூலம் உலக அளவில் சிறந்த இலக்கியவாதியாக இன்றும் திகழ்கிறார். திராவிட பாரம்பரியம், கலாச்சாரம், தமிழ்பற்று அவரிடம் நிரம்பியிருக்கிறது. இதன் மூலம் கலைஞரை இந்தியா முழுவதும் பேச வைத்திருக்கிறது. இங்கு வந்திருக்கின்ற அனைத்து தலைவர்களுக்கும் நான் கூறுவது இப்போது இந்தியாவிற்கு ஜனநாயக கொள்கை தேவைப்படுகிறது. 

மதசார்பற்ற, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவாக இருக்க வேண்டும்.  பா.ஜ.க. வின் மதசார்புடைய தன்மைக்கு எதிராகத் தான் கலைஞர் இருப்பார். கலைஞர் எப்பொழுதும்  இதைத்தான் விரும்புவார். இந்த தமிழ்நாடு வகுத்து கொடுத்த பாதையிலே சென்றால் கலைஞர் போட்டுக் கொடுத்த அந்த பாதையிலே சென்றால் அது இந்தியா முழுவதும் வெல்லும். 

நாளைக்கு சரித்திரம் சொல்லும். இந்தியாவிலே மதவாதத்தை திணிக்கின்ற முயற்சியை வென்றுஎடுத்த பெருமை தமிழ்மண்ணிலே இருந்து வந்த இந்த திராவிட நெறிக்கு இந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறிக்கு இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நெறிக்கு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன இந்த நெறிக்கு தான் இந்தியா முழுவதிலும் வரவேற்பு இருக்கிறது. 

இந்தியா திராவிட கொள்கையின் அடிப் படையில் சென்றால் நாடு முழுவதிலும் உள்ள மூலைமுடுக்குகளிலும் நல்ல வளர்ச்சியை காண முடியும்.

இந்த திராவிட கொள்கையை அடிப் படையில்  சமூக நீதியை அடிப்படையாக கொண்டு மதம், ஜாதி, இனம் என்கின்ற  வேறுபாடுகளை வேர் அறுக்கக்கூடிய கொள்கை களை கொண்டு போய் இந்தியா முழுவதிலும் நிலைநாட்டக்கூடிய ஒரு தத்துவத்தை இந்தியா முழுவதும் நிலை நாட்ட வேண்டிய கடமை மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது. 
தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக் கிறீர்கள். பெரியார், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், பேராசிரியரும் வகுத்து கொடுத்த அந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்ற மு.க. ஸ்டாலின் இந்த தலைவர்களோடு ஒன்று சேருங்கள். இந்தியாவை மாற்றுங்கள். இந்திய சமுதாயத்தை மாற்றி அமைப்பது தான் கலைஞர் கண்ட கனவு அந்த கனவு நிறைவேறக்கூடிய காலம் வெகுவிரைவில் வரும் என்பதற்கு இந்த மேடை ஒரு சாட்சி என்பதை தெரிவித்துக்கொண்டு இந்த மேடையில் இருப்பவர்கள் கலைஞரை பாராட்ட,போற்ற வாழ்த்த, வந்திருக்கிறார்கள் என்று நான் நம்ப மாட்டேன். 

தமிழ்நாட்டிலே ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு இந்த மேடை ஒரு ஆரம்பமாக இருக்கிறது. இதேவேளை இந்தியா முழுவதிலும் ஒரு நல்லாட்சியை, ஒரு சமுதாய மாற்றமுள்ள ஆட்சியை மதசார்பற்ற ஆட்சியை, இந்தியா முழுவதும் கொண்டு வரக்கூடிய காட்சி இங்கு நிரூபிக்கிறது. ராகுல் ஜி ராகுல் ஜி செங்கோட்டைக்கு செல்லுங்கள். நல்லாட்சியை வெல்லுங்கள் என்று சொல்லி அனைவரும் அவருக்கு ஒத்துழைப்போம் என்று நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரிர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் எரிவாயுக் குழாய்களை பதிக்க முயன்ற ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு 
எதிராக மக்கள் கிளர்த்தெழுந்து போராடினார்கள். 

மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் செயராமன் அவர்களை மட்டும் தனிமைப் படுத்தி சிறையில் அடைத்துள்ளர்.
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

உடனடியாக அவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள 

பழ.நெடுமாறன்

சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் -

கட்சி அறிவிப்புகள்: 
சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - திருவாடானை | 04-06-2017 நாம் தமிழர் கட்சி
இன்று 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்றுஎழுச்சியுரையாற்றுகிறார்.
வலைதளம்: https://goo.gl/XB5vYS
---
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 - 4380 4084
செந்தில்குமார். கு (+91- 9600 70 9263)
மாநிலச் செய்திப்பிரிவு இணை செயலாளர்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு கலங்க வேண்டாம்... கழகங்களுடன் கூட்டணி இல்லை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு
கலங்க வேண்டாம்... கழகங்களுடன் கூட்டணி இல்லை!

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், எனது நண்பருமான கலைஞரின் 94-ஆவது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை நுழைவு வைரவிழாவையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று முன்நாள்  அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையை எனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன்.

எனது முகநூல் பக்கத்தில் இதுதொடர்பாக பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் பலர் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து கலைஞருக்கு வாழ்த்து கூறியதற்காக நன்றி தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்... அக்கட்சியுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி அமைத்துக் கொள்ளக் கூடாது என்று அன்பாக எச்சரிக்கை  விட்டிருந்தனர். அந்த இளைஞர்களுக்கு விளக்கமளிப்பதற்காகத் தான் இந்த முகநூல் பதிவு ஆகும்.

தலைவர்களின் பிறந்தநாள்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அரசியல் நாகரிகங்களில் ஒன்றாகும். வட மாநிலங்களில் அரசியல்ரீதியாக எதிரெதிர் அணிகளில் இருப்பவர்கள் கூட பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்று கூடுவதும், அரசியல் தவிர்த்து பிற இடங்களில் நண்பர்களாக பழகுவதும் வாடிக்கையாகும். அத்தகைய நாகரிக கலாச்சாரத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். ஆனால், எதிர் அணியில் உள்ள தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பது கூட அரசியலாக்கப்படுவது தான் தமிழகத்தின் துரதிருஷ்டம் ஆகும்.

திமுகவின் முன்னாள் பொருளாளரும், எனது இனிய நண்பருமான ஆற்காடு வீராசாமி சில வாரங்களுக்கு முன் முத்துவிழா கொண்டாடினார். திமுக தலைமையகமான அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அவ்விழாவில் நான் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வீராசாமியின் புதல்வரும், மருத்துவருமான வீ. கலாநிதி குடும்பத்துடன் என்னை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையேற்று அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மனம் நிறைய விரும்பினேன். ஆனால், திமுக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் அக்கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டால் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும் என்பதற்காகவே பங்கேற்பதைத் தவிர்த்தேன். அவ்விழாவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் நண்பர் ஆற்காடு வீராசாமி  அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக கடந்த ஒன்றாம் தேதி காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லம் சென்றேன். அவரும், குடும்பத்தினரும் அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து ஆற்காடு வீராசாமியுடன்  உரையாடிக் கொண்டிருக்கும் போது‘‘ உங்களுடனான இன்றைய சந்திப்பைக்கூட ஊடகங்கள் வேறு விதமாகத் தான் வர்ணிக்கும். காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை  திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்திருக்கிறேன். 

கட்சி என்பது வேறு, நட்பு என்பது வேறு. அதிமுகவுடனும், திமுகவுடனும் எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவு ஆகும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற எங்களின் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். ஆனாலும், அரசியலைக் கடந்தது நமது நட்பு என்பதால் தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்’’  என்று கூறினேன். அதை நண்பர் ஆற்காடு வீராசாமி அவர்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது ஆற்காட்டாரின் புதல்வர் வீ.கலாநிதி, பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர், செய்தித்தொடர்பாளர் பாலு, சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் வி.ஜே.பாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதன்மூலம் நமது இளைஞர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நமது கொள்கையில் நாம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் அரசியல் நாகரிகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் அரசியல் நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும், அறிக்கை வாயிலாகவும் தெரிவிக்கிறோம்.

இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும் விட நான் தெளிவாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை. தெளிவாக இருங்கள். அதிமுக, திமுக அல்லாத அரசை  தமிழகத்தில் அமைத்தே தீருவது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிக மிக மிக உறுதியாக உள்ளது

பிரான்சில் சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு தேர்வு : தமிழக வீரர்கள் அபாரம்

:
அறிக்கை
       16 வயதுக்கு குறைவானவர்களுக்கான சர்வதேச அளவிலான கடற்கரை வாலிபால் (Beach VollyBall) போட்டி பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்றது.
03-06-2017 சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக வீரர்கள் இருவர் கொண்ட அணி சர்வதேச அளவிலான இரண்டாவது இடத்தை பெற்றது.
      இறுதிப்போட்டியில் (Final Match) பிரேசில் அணியுடன் மோதியதில் பிரேசில் அணி வென்றது. இந்திய அணி இரண்டாவது (Runner) பரிசுக்கு தேர்வானது.
      இந்தியா சார்பில் தமிழகத்தின் நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், பழையாறு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராபின் (வயது 16) என்ற மாணவரும், நாமக்கல்லைச் சேர்ந்த தருண் என்ற மாணவரும் இணைந்து ஜோடியாக விளையாடி இரண்டாவது பரிசு பெற்றனர்.
      மாணவர் ராபின், சீர்காழி தாலுகா, பழையாறு மீனவ கிராமத்தைச் சேந்த மீனவர் திரு.ரவி, திருமதி. தனலட்சுமி தம்பதியினரின் மகன். இவர் சீர்காழியில் உள்ள பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்து இந்தாண்டு 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவராவார். தமிழ்நாடு கடற்கரை வாலிபால் கழகத்தின் மூலம், இந்திய அணி சார்பில் வாலிபால் விளையாட தேர்வாகியுள்ளார்.
       இவருடன் சேர்ந்து இந்திய டீமில் விளையாட 3 பேர் தேர்வாகினர் ராபின், தருண் (நாமக்கல்), மற்றும் சுவாகத் (நாமக்கல்) ஆகிய 3 பேர் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கடற்கரை வாலிபால் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி பிரான்சு நாட்டுக்கு சென்றனர்.
      அங்கு இறுதிப் போட்டியில் ராபின், தருண் ஆகிய இருவர்  ஜோடியாக விளையாடி இரண்டாவது இடத்துக்கு தேர்வாகி இரண்டாம் பரிசை வென்றனர்.
         சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கும், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ராபின் அவர்களுக்கும் தேசிய மீனவர் பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
        இந்திய அரசும், தமிழக அரசும் இந்திய, (தமிழக) வீரர்களை பாராட்டி விருது வழங்கி கொளரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
     இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து நாடு திரும்பும் வெற்றி வீரர்கள் நாளை 05-06-2017 இரவு 8.00 மணிக்கு சென்னை திரும்புகிறார்கள்.
        சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும் வீரர்களை வரவேற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்களையும், மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களையும், மாண்புமிகு கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
        மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ராபின் மற்றும் வீரர்களுக்கு தேசிய மீனவர் பேரவை சார்பில் தலைவர் திரு. மா. இளங்கோ,Ex.MLA தலைமையில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும்.
                                     மா. இளங்கோ,Ex.MLA,
                                         தலைவர்,

                                     தேசிய மீனவர் பேரவை.

புதுச்சேரியில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் 116 பேர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் கடனுதவி

செய்தி குறிப்பு


    புதுச்சேரியில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் 116 பேர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.
     மீனவ சமுதாயத்துக்கான சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் முகாம் புதுச்சேரியில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நடைபெற்றது.
     பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை – புதுச்சேரி வட்டம் சார்பில் புதுச்சேரி ராயல்பார்க் ஓட்டலில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி துணை வட்டாரத்தலைவர் சி.எம். இராமன் தலைமை வகித்தார்.
    தேசிய மீனவர் பேரவை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ மா. இளங்கோ, இந்திய பெண்கள் கூட்டமைப்பின் புதுவை பிரிவு தலைவர், தொழிலதிபர் திருமதி. ராதிகா ரகு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவ பெண்களுக்கு, கடனுதவிகளை வழங்கினார்கள். மீனவப் பெண்கள் அல்லாத பல்வேறு சிறு தொழில் முனைவோர்களான பல பெண்களுக்கும் கடனுதவி வழங்கப்பட்டது.
     பஞ்சாப் நேஷனல் வங்கி புதுச்சேரி கிளை சீனியர் மேனேஜர் என்.ஜி. அரவிந்த், துணை மேலாளர் கே. கற்பூரசுப்புராயன் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
                                              மா. இளங்கோ,
                                                 தலைவர்,
                                          தேசிய மீனவர் பேரவை.

"கூத்தன்"

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் படைப்பாக "கூத்தன்" என்ற படத்தை தயாரிக்கிறது.

இதன் தயாரிப்பாளர் திரு.நீல்கிரிஸ்முருகன் அவர்கள் தன்னுடைய மகன் ராஜ்குமார் B.E அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு : மாட்ஸ் DF.Tech, "கூத்தன்" கதை எழுதி இயக்குபவர் வெங்கி.A.L.
நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா அரக்கோணம் அருகே உள்ள திருவெங்காடு சிவன் கோவிலில் 12ஆம் தேதி நடந்தது.

இந்தக் கோவில் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நடந்ததற்கு காரணம் இவர்களின் முதல் படைப்பான "கூத்தன்" படக்கதை அந்தக் கோவில் சிவனை தொடர்பு படுத்தியது அதனால் தான் இங்கு நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் ராஜ்குமார் B.E. கதை நாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.