ராசி மணல் அணை கட்ட பரிசீலினை முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறேன்: பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு நதிகள் சீரமைப்பு மேம்பாட்டு கழகம் ஏற்படுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டுக் கழக வழிகாட்டு முறைகளை பின்பற்றி அரசானை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

சாலை சீரமைப்பு பணிகளில் மேம்பாட் டுக் கழகம் என்ற பெயரில் உலக பெரு முதலாளிகளை அனுமதித்து அவர்களின் முதலீட்டில் சாலைகள் அமைத்து விருப்பத்திற்கு சுங்க வரிவிதித்து சேவை என்ற நிலை மாறி வணிக ரீதியில் பெரும் வருவாயை ஈட்டும் தொழிலாக மாறி வாகன உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு போராட்டக்களத்தில் ஈடுபட்டள்ளனர்.

இந்நிலையில் இதனை பின்பற்றி ஆறுகள் சீரமைப்பு மேம்பாட்டுக் கழகம் அமைக்க அரசானை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பாசனத்துறையில் தனியாரை அனுமதித்தால் மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியாது, பாசன விதிமுறைகள் மீறப்படும். விருப்பத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கக் கூடும், விவசாயிகளின் பாசன உரிமைகள் பறிப்போகும், பாசன கட்டமைப்புகள் அடியோடு அழிந்து விவசாயம், பாசனம் பாதிக்கப்படும் என வே பாதிப்புகளை உணர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசானையை ரத்து செய்து, பாசனத்திற்க்கென தனித்துறையை ஏற்படுத்த வேண்டும்.

காவிரியின் குறுக்கே ராசி மணல் அனை கட்டுவது குறித்து தமிழக அரசின் பரிசீலினையில் உள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

மேகதாட்டு அனைகட்ட தமிழகம் மறுப்பது சட்டத்திற்குட்பட்டது. அதோடு ராசி மணல் அனை கட்டுவதை இணைத்து பேசுவது பொருத்தமற்றது.

காரணம் கர்நாடக மாநிலத்திற்க்கு கீழே தமிழகம் நோக்கி செல்லும் தண்ணீரை  தனது எல்லையின் இறுதிப் பகுதியில் கர்நாடகம் அனைகட்ட முடியாது எனவும் தமிழகம் வழியாக செல்லும் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து அனைகட்டி பயன் படுத்திக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது. மத்தி யஅரசின் வனத்துறையிடம் மட்டும் தான் அனுமதி பெற வேண்டும். இதனை நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மேல் முறையீட்டு அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத் தால் முடித்து வைக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டப் பிறகு தமிழகம் வழியே ஓடும் தண்ணீரை புதிய திட்டங்கள் மூலம்  பயன்படுத்திக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. 

எனவே தான் கர்நாடகம் தனது எல்லையின் இறுதியில் தமிழக எல்லை முகப்பில் அனைகட்டி தடுக்க தனக்கு சட்ட படியான உரிமை இல்லை என்பதை உணர்ந்து தான், தமிழகம் உபரி நீரை தடுக்க தவறிவிட்டதாகவும், மேட்டூர் அனைக்கு கீழ் பகுதி வங்கக் கடல் வரை சமதல விளை நிலப்பகுதி என்பதால் தமிழகத்தில் அனைக் கட்ட முடியவில்லை என்றும் எனவே மோதாட்டுவில் அனைகட்டி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை விடுவிப்பதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குறிப்பிடுவதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

இதனை  தமிழக முதலமைச்சர் உணர வேண்டும். கர்நாடகாவின் எல்லைக்கு கீழ் (மே கதாட்டு) நோக்கி ஒக்கேனக்கல் வரை ஓடி வரும் சுமார் 62 கிமீ காவிரி ஆறுமுழுமையும் தமிழகத்திற்கு சொந்தம்.எனவே ராசி மணல் மட்டும் தான் மலைக்குன்றுகளுக்கிடையே தமிழகம் அனைகட்ட உகந்த  இடம். இதனை கர்நாடகம் மறுப்பதற்கு முடியாது, அவர் களிடம் அனுமதி கேட்கவும் தேவையில்லை.

ஏற்கனவே ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள்  துவக்கப்பட்ட போது  கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்த போது அதனை சட்டவிரோதமானது என்று எடுத்துக் கூறி தமிழக அரசு உரிமையை உறுதி செய்துள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன். 

எனவே மத்திய அரசு வனத்துறை அனுமதியை பெற்று ராசி மணல் அனை கட்டுமானப் பணியினை உடன் துவக்கிட தமிழக அரசை உடன் வலியுறுத்துகிறேன் 

நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுநர் என்று பொது வெளியிலும், பத்திரிக்கை, ஊடகங்களிலும் வெளிப்படையான கருத்துகளை வெளியிட துவங்கினாரோ அன்றுல் அவரும் பத்திரிக்கை, ஊடக விமர்சனங்களக்குட்டவரே. ஆனால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் பெற வேண்டும் காவல்துறை மூலம் அடக்கு முறை கையால்வது பத்திரிக்கை சுதந்திரம் பறிபோகும். உண்மைக்கு புறம்பான செய்தி என்றால் நீதிமன்றம் மூலம் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.

சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், சென்னை மாவட்ட செயலாளர் தி நகர் கோபிநாத் நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Latest
Previous
Next Post »
0 Komentar