பிரான்சில் சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு தேர்வு : தமிழக வீரர்கள் அபாரம்

:
அறிக்கை
       16 வயதுக்கு குறைவானவர்களுக்கான சர்வதேச அளவிலான கடற்கரை வாலிபால் (Beach VollyBall) போட்டி பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்றது.
03-06-2017 சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக வீரர்கள் இருவர் கொண்ட அணி சர்வதேச அளவிலான இரண்டாவது இடத்தை பெற்றது.
      இறுதிப்போட்டியில் (Final Match) பிரேசில் அணியுடன் மோதியதில் பிரேசில் அணி வென்றது. இந்திய அணி இரண்டாவது (Runner) பரிசுக்கு தேர்வானது.
      இந்தியா சார்பில் தமிழகத்தின் நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், பழையாறு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராபின் (வயது 16) என்ற மாணவரும், நாமக்கல்லைச் சேர்ந்த தருண் என்ற மாணவரும் இணைந்து ஜோடியாக விளையாடி இரண்டாவது பரிசு பெற்றனர்.
      மாணவர் ராபின், சீர்காழி தாலுகா, பழையாறு மீனவ கிராமத்தைச் சேந்த மீனவர் திரு.ரவி, திருமதி. தனலட்சுமி தம்பதியினரின் மகன். இவர் சீர்காழியில் உள்ள பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்து இந்தாண்டு 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவராவார். தமிழ்நாடு கடற்கரை வாலிபால் கழகத்தின் மூலம், இந்திய அணி சார்பில் வாலிபால் விளையாட தேர்வாகியுள்ளார்.
       இவருடன் சேர்ந்து இந்திய டீமில் விளையாட 3 பேர் தேர்வாகினர் ராபின், தருண் (நாமக்கல்), மற்றும் சுவாகத் (நாமக்கல்) ஆகிய 3 பேர் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கடற்கரை வாலிபால் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி பிரான்சு நாட்டுக்கு சென்றனர்.
      அங்கு இறுதிப் போட்டியில் ராபின், தருண் ஆகிய இருவர்  ஜோடியாக விளையாடி இரண்டாவது இடத்துக்கு தேர்வாகி இரண்டாம் பரிசை வென்றனர்.
         சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கும், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ராபின் அவர்களுக்கும் தேசிய மீனவர் பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
        இந்திய அரசும், தமிழக அரசும் இந்திய, (தமிழக) வீரர்களை பாராட்டி விருது வழங்கி கொளரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
     இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து நாடு திரும்பும் வெற்றி வீரர்கள் நாளை 05-06-2017 இரவு 8.00 மணிக்கு சென்னை திரும்புகிறார்கள்.
        சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும் வீரர்களை வரவேற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்களையும், மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களையும், மாண்புமிகு கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
        மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ராபின் மற்றும் வீரர்களுக்கு தேசிய மீனவர் பேரவை சார்பில் தலைவர் திரு. மா. இளங்கோ,Ex.MLA தலைமையில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும்.
                                     மா. இளங்கோ,Ex.MLA,
                                         தலைவர்,

                                     தேசிய மீனவர் பேரவை.
Previous
Next Post »
0 Komentar