கலைஞருக்கு நோபல் பரிசும், மத்திய அரசு பாரத ரத்னாவும் வழங்க வேண்டும் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்


தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய 94-வது பிறந்தநாள் விழாவும், 60 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து தமிழ்சமுதாயத்திற்கு பணியாற்றிக்கொண்டிருக்கிற சேவையை போற்றுகின்ற வைர விழாவை இணைத்து இந்த அருமையான அரங்கத்தை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கிற பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராக விளங்கக்கூடிய நமது பேரன்புக்குரிய பேராசிரியர் அவர்களே! விழாவிற்கு முன்னிலை வகிக்கும் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! இங்கே சிறப்பாக வருகை தந்து விழாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்ற அருமை  ராகுல் ஜி அவர்களே! இங்கு வருகை தந்திருக்கின்ற நிதிஷ் குமார் அவர்களே! மற்றும் மேடையில் வீற்றிருக்கின்ற அனைத்து கட்சிகளுடைய அன்புக்குரிய சகோதரர்களே! திரளாக கூடியிருக்கின்ற பெரியோர்களே! அருமை சகோதர சகோதரிகளே! கலைஞர் அவர்களை பற்றி அவர்களோடு நாங்கள் கொண்டிருக்கிற உறவுவை பற்றி சிறுபான்மை முஸ்லிம் மக்களோடு, அவர் கொண்டிருக்கிற அன்பை பற்றி சமுதாயத்திற்கு ஆற்றியிருக்கின்ற பணியை பற்றி திராவிட முன்னேற்ற கழகமும், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயமும், மற்றுமுள்ள சிறுபான்மை இயக்கங்களும், சமுதாயங்களும் எவ்வளவு உள்ளப்பூர்வமாக உணர்வுப்பூர்வமாக உறவு கொண்டிருக்கிற என்பது பற்றியும் நீண்ட நெடிய உரையாற்றக்கூடிய தருணம் இது இல்லை. 

கலைஞர் 94 வயதை எட்டி இனியும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்ற வாழ்த்தரங்கம் இது. கலைஞரை பற்றி இங்கு பேசிய பெரியவர்கள் 
அருமையான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அவர் மாநில சுயாட்சியை நிலைநிறுத்த பாடுபட்டவர். தமிழ் நாட்டுடைய பாரம்பரியத்தை, பண்பாட்டை, நிலைநிறுத்திய பெருமைக்குரியவர். சமூக நீதியை காத்த மகாதலைவர். தமிழ்நாட்டிலே அவர் ஆற்றிய பணிகள் தமிழ்நாட்டு மக்களாலேயே ஏற்றுக் கொள்ளப் பட்டது மட்டுமல்லாமல் இந்திய அளவிலே அவரை உயர்த்தியிருக்கிறது.  தேசிய தலைவராக உயர்ந்திருக்கிறார். இந்த கருத்துக்களை யெல்லாம் உள்ளடக்கி இங்கே சொன்னார்கள். பீகார் முதலமைச்சர்  நிதிஷ் குமார் ஜி அவர்கள் இங்கே பேசுகிற பொழுது வரக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான ஆட்சி தளபதி மு.க. ஸ்டாலின் விரைவில் முதலமைச்சர் ஆவார் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இங்கே செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் மேடை அமைத்திருக்கிறார்கள்.  ஆக கோட்டைக்குள்ளே நீங்கள் பார்க்கும் போது இது இந்த அமைப்பை எடுத்துக்காட்டுகிறது.  

அடுத்து திராவிட முன்னேற்ற கழகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் நுழையப்போகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இங்கே ஒன்றை நான் நினைவுப்படுத்த வேண்டும்.  
1980-ல் ஆண்டில் தமிழகத்திலே காலடி வைத்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை """"நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! """" என்று கலைஞர் சொன்னார்.  அவர் சொன்னது நடந்தது. 2004-ஆம் ஆண்டு """"இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவுக்கு நல்லாட்சி தருக!"" என்று அவர் சொன்னார். அது நடந்தது.
 
அதனுடைய விளைவாக மத்தியில் அற்புதமான 10 ஆண்டு ஆட்சி, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும், செல்வ செழிப்போடு வளர்வதற்கான வாய்ப்பை அந்த ஆட்சி உருவாக்கி தந்தது. ஆனால் இப்பொழுது நிதிஷ் குமார் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமர்ந்து  முதலமைச்சராக வரப்போகிறார் என்றார். இதே மேடையில் கலைஞர் அவர்கள் வீற்றிருப்பாராரேயானால் நிச்சயமாக ஒன்றை சொல்லியிருப்பார். ராகுல் ஜியே ராகுல் ஜியே செங்கோட்டைக்கு நீங்கள் செல்லுங்கள். வருகிற ஆட்சியை வெல்லுங்கள் என்று நிச்சயமாக சொல்லியிருப்பார். அதையே நாங்களும் உங்கள் சார்பாக சொல்ல விரும்புகிறோம். 

ஆக இந்த தமிழகத்திலே அற்புதமான ஒரு மாமனிதர் கலைஞர் அவரை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் கிடையாது.  துரைமுருகன் சொன்னது போல அவரை பற்றி காலமெல்லாம் பேசிக்கொண்டிருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் எங்களிடத்திலே உண்டு. அவரோடு பழகியது, பேசிய அனுபவங்கள், அவர் இட்ட கட்டளையை ஏற்று, அதன்படி நடந்தது, நாட்டிலேவே ஏற் பட்டிருக்கிற எண்ணற்ற மாற்றங்களை பற்றி எல்லாம் நாங்கள் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கிறக் கக்கூடியவர்கள். ஆகவே நான் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.  மூன்று விஷயங்களை மட்டும் சொல்லி முடிவு செய்கிறேன்.

ஒன்று இந்திய அரசு இன்றைய தினம் கட்டுத்தறி இல்லாத காட்டு மிராண்டிதனத்தை நோக்கி சென்று கொண்டிருக் கிறது. 
மத்தியிலே ஆளக்கூடிய அரசு அதற்குரிய வரம்பு களையெல்லாம் மீறி வரம்பற்ற ஆட்சிக்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்த வரம்பற்ற ஆட்சியை கடிவாளம் போட வேண்டிய கடமை தமிழகத்துக்கு உண்டு. அதற்கு வழிகாட்டியாக அமைந்தவர் டாக்டர் கலைஞர். அவர் தான் தமிழகத்தில் முதல்முறையாக மாநில சுயாட்சி உரிமைக்காக கமிஷன் அமைத்து இந்தியாவிலே யாரும் செய்யாத காரியத்தை செய்தார்கள். மாநில உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற போது தான் இந்தியாவுக்கு பெருமை வந்து சேரும் என்று சொன்னார்கள். 
அந்த அடிப்படையில் இன்றைய தினம் மாட்டிறைச்சி விஷயத்திலும், நீட் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் யாரை பிற்படுத்தப்பட்ட மக்கள்(க்ஷயஉமறயசன உடயளள)  என்று நிர்ணயிக்கின்ற உரிமையை இதுவரை ஒவ்வொரு மாநிலமும் செய்தது. இப்போது மத்திய அரசு தானே செய்ய விரும்புகிறது. கல்வித்துறையை மாநிலம் இதுவரை செய்து வந்தது. 

அந்த உரிமையை இன்று மத்திய அரசு பறிக்கிறது. அதே மாதிரி ஆடு, மாடு போன்றவற்றில் மாநில உரிமை இதுவரை நிலைநிறுத்தப்பட்டு வந்தது. அதனை இன்று மத்திய அரசு பறிக்கிறது. இப்படி பறிக்கக்கூடிய நிலையில் உள்ள மத்திய அரசை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி இங்கு இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, சிவா பாராளுமன்றத்திலே மாநில உரிமையை பாதுகாக்கக் கூடிய ( ளுவயவநசபைhவள க்ஷடைட) ஒன்றைகொண்டு வரவேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன். 

அந்த பில்லின் அடிப்படையில் உள்ள எந்த ஒரு சப்ஜெட் பற்றிய பில்லையும் மத்திய அரசு முடிவு செய்தால் ஒவ்வொரு மாநிலமும் அதனுடைய சட்டமன்றத்திலே நான்கில் மூன்று பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனுமதி கொடுத்த பிறகு தான் அந்த சட்ட சீர்திருத்தத்தை கொண்டுவந்து  நிறைவேற்ற வேண்டும் அந்த அடிப்டையில் தான் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். இங்கு வந்திருக்கக்கூடிய அனைவரும் அதனை செய்ய வேண்டும் என்று பணிவன்புபோடு கேட்டுக்கொள்கிறேன்.  
அடுத்து கலைஞர் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கக்கூடிய நிலை.அவருடைய ஆற்றல், அறிவு, இலக்கிய சேவை, தமிழுக்கு செய்திருக்கிற தொண்டு, அவருக்கு ஈடாக ஒப்பாக உவமை சொல்லக்கூடிய ஒருவரும் உலகத்திலே இல்லை. இந்த நூற்றாண்டிலே இல்லை. இது எத்தனை நுற்றாண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு தலைவர் வருவார் என்று சொல்வதற்கு இல்லை. அப்படி பட்ட ஒரு தலைவருக்கு உலக அளவிலே நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்று ஆசிக்கிறேன். 
அதற்கு முன்னதாக இந்தியாவிலே உள்ள பாரத ரத்னா என்கின்ற அந்த பட்டத்தை மத்திய அரசு உடனடியாக வழங்கி இதுவரை தமிழகத்துக்கு செய்து வந்த துரோகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். 
அதோடு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சி தலைவர்களின் முன்னிலையில் நான் வைக்கிறேன். கலைஞர் வலதும், இடதும் இல்லாமல் மனிதநேயத்தோடு இருப்பவர். அந்த மனிதநேயத்தின் அடிப்படையில் தான் தமிழ் இலக்கியத்தின் மூலம், தொல்காப்பியம், சங்கத்தமிழ், திருக்குறள் ஆகியவைகள் மூலம் உலக அளவில் சிறந்த இலக்கியவாதியாக இன்றும் திகழ்கிறார். திராவிட பாரம்பரியம், கலாச்சாரம், தமிழ்பற்று அவரிடம் நிரம்பியிருக்கிறது. இதன் மூலம் கலைஞரை இந்தியா முழுவதும் பேச வைத்திருக்கிறது. இங்கு வந்திருக்கின்ற அனைத்து தலைவர்களுக்கும் நான் கூறுவது இப்போது இந்தியாவிற்கு ஜனநாயக கொள்கை தேவைப்படுகிறது. 

மதசார்பற்ற, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவாக இருக்க வேண்டும்.  பா.ஜ.க. வின் மதசார்புடைய தன்மைக்கு எதிராகத் தான் கலைஞர் இருப்பார். கலைஞர் எப்பொழுதும்  இதைத்தான் விரும்புவார். இந்த தமிழ்நாடு வகுத்து கொடுத்த பாதையிலே சென்றால் கலைஞர் போட்டுக் கொடுத்த அந்த பாதையிலே சென்றால் அது இந்தியா முழுவதும் வெல்லும். 

நாளைக்கு சரித்திரம் சொல்லும். இந்தியாவிலே மதவாதத்தை திணிக்கின்ற முயற்சியை வென்றுஎடுத்த பெருமை தமிழ்மண்ணிலே இருந்து வந்த இந்த திராவிட நெறிக்கு இந்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறிக்கு இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நெறிக்கு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன இந்த நெறிக்கு தான் இந்தியா முழுவதிலும் வரவேற்பு இருக்கிறது. 

இந்தியா திராவிட கொள்கையின் அடிப் படையில் சென்றால் நாடு முழுவதிலும் உள்ள மூலைமுடுக்குகளிலும் நல்ல வளர்ச்சியை காண முடியும்.

இந்த திராவிட கொள்கையை அடிப் படையில்  சமூக நீதியை அடிப்படையாக கொண்டு மதம், ஜாதி, இனம் என்கின்ற  வேறுபாடுகளை வேர் அறுக்கக்கூடிய கொள்கை களை கொண்டு போய் இந்தியா முழுவதிலும் நிலைநாட்டக்கூடிய ஒரு தத்துவத்தை இந்தியா முழுவதும் நிலை நாட்ட வேண்டிய கடமை மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது. 
தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக் கிறீர்கள். பெரியார், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், பேராசிரியரும் வகுத்து கொடுத்த அந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்ற மு.க. ஸ்டாலின் இந்த தலைவர்களோடு ஒன்று சேருங்கள். இந்தியாவை மாற்றுங்கள். இந்திய சமுதாயத்தை மாற்றி அமைப்பது தான் கலைஞர் கண்ட கனவு அந்த கனவு நிறைவேறக்கூடிய காலம் வெகுவிரைவில் வரும் என்பதற்கு இந்த மேடை ஒரு சாட்சி என்பதை தெரிவித்துக்கொண்டு இந்த மேடையில் இருப்பவர்கள் கலைஞரை பாராட்ட,போற்ற வாழ்த்த, வந்திருக்கிறார்கள் என்று நான் நம்ப மாட்டேன். 

தமிழ்நாட்டிலே ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு இந்த மேடை ஒரு ஆரம்பமாக இருக்கிறது. இதேவேளை இந்தியா முழுவதிலும் ஒரு நல்லாட்சியை, ஒரு சமுதாய மாற்றமுள்ள ஆட்சியை மதசார்பற்ற ஆட்சியை, இந்தியா முழுவதும் கொண்டு வரக்கூடிய காட்சி இங்கு நிரூபிக்கிறது. ராகுல் ஜி ராகுல் ஜி செங்கோட்டைக்கு செல்லுங்கள். நல்லாட்சியை வெல்லுங்கள் என்று சொல்லி அனைவரும் அவருக்கு ஒத்துழைப்போம் என்று நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரிர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
Previous
Next Post »
0 Komentar