18.01.2017
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
பொருள் : ஜல்லிக்கட்டு போராட்டம் - உடனடி தலையீடு கோரி
அன்புடையீர், வணக்கம்.
தமிழக மக்கள் அனைவரின் உணர்வாகவும், கலாச்சார பாரம்பரியமாகவும் விளங்குகின்ற ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவே அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள். இந்த நிலையில் தாங்கள்
1. போராட்டம் நடத்துபவர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையளிக்கும் வகையில் சுமுக தீர்வு காண வேண்டுமெனவும்,
2. உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவும், பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்தம் கொண்டு வரவும் பிரதமரை தாங்கள் நேரடியாக சந்தித்து வலியுறுத்த வேண்டுமெனவும்,
3. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டுமெனவும்
கேட்டுக் கொள்கிறோம். மேலும், இனி வரும் காலத்தில் தடையின்றி ஜல்லிக்கட்டை நடCத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தவும், நிர்ப்பந்திக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
(ஜி. ராமகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

0 Komentar