நேரில் ஆய்வு - பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டரிந்த எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் அறவளிப் போராட்டத்தை காவல்துறையினர் தடியடி மூலம் கலைத்ததால் சென்னை முழுவதும் கலவரம் மூண்டது. இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுகுப்பம், நொச்சிகுப்பம், ரூதர்புரம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் தன்னெழுச்சி மிகுந்த போராட்டம் உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டது. மாணவர்களின் அறவளிப்போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்பகுதி மக்களிடம் நடந்த அனைத்து சம்பவங்களையும் கேட்கும் போது அவர்கள் கூறியதாவது:-

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தோம் என்ற காரணத்தினால் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களின் மீது காவல்துறையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள மீன் மார்கெட், கடைகள், வாகனங்களை காவல்துறையினரே எரித்துள்ளனர் என்றும், மாணவர்களின் கட்டுப்பாடு மிகுந்த, நாகரீகமான அமைதி வலிப்போராட்டத்தை சீர்குழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு காவல்துறையினர் செயல்பட்டுள்ளதாகவும், ரூதர்புரம், ரோட்டரி நகர் பகுதிகளில் உள்ள குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் காவல்துறையினர் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர் என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வைக்க கூடிய கோரிக்கை என்னவென்றால் பாதிக்கப்பட்டுள்ள நடுக்குப்பம், நொச்சிக்குப்பம்,  ரூதர்புரம், கிருஷ்ணாம்பேட்டை பகுதி மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இப்பகுதிகளில் தொடர்ந்து சுமூக நிலை உருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கலவரம் ஏற்பட காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடுகுப்பம் பகுதியில் மீன் மார்கெட் கட்டித்தரப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உடன் கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, மாநில பொருளாளர் முகைதீன், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முகமது ஃபாரூக், வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் கலீல் ரஹ்மான், வழக்கறிஞர் அணி சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

இச்செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Previous
Next Post »
0 Komentar