அகழ்வுஆய்வுகள் தொடர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.

மத்திய அரசு தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாய்வுகளை தொடங்குவதற்கான அனுமதியை மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்து தமிழ்நாளிதழில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன் ஏராளமான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
கீழடியில் ஏராளமான புதிய பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் தற்போது எத்தகைய காரணமுமின்றி கீழடி ஆய்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது ஆய்வு பணிகள் முடக்கம் செயல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
அகழ்வாய்வுகள் அறிவியலோடு நெருக்கம் கொண்டது அகழ்வாய்வுகள் பண்பாட்டை அறிய தொன்மைகளை அறிய பெரும் பங்காற்றுகிறது. இப்பணிகளை இரண்டு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்பது தொல்லியல் அகழ்வாய்வுகளுக்கு நெருக்கடியை தரும். அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வர இயலாது.
வடமாநிலங்களில் சில இடங்களில் ஆய்வுகள் 10,12 ஆண்டுகள் நடைபெறும் போது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது புரியவில்லை. 2005 ல் ஆண்டு அதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட முடிவுகள் வெளிவரவில்லை. ஆனால் அதற்கு பின் வட மாநிலங்களில்ல சில இடங்களில் அகழ்வாய்வு முடிவுகள் வெளிவருகின்றன.
தொல்லியல்துறை இந்தியக் கலாச்சார துறைக்கு அகழ்வாய்வுகள் சம்மந்தமாக புதிய கொள்கையும். நிர்வாக அணுகுமுறையும் தேவைபடுகிறது. இந்திய தொல்லியல் அறிஞர்களின் கருத்தறிந்து அகழ்வுஆய்வுகள் தொடர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
    (இரா.முத்தரசன்)
  மாநிலச் செயலாளர்

Related Post

0 Komentar