இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழுக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று

(10.1.2017) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில்

நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு

உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசு

கி, பி. சம்பத், அ. சவுந்தரராசன்,

கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழக அரசின் வறட்சி நிவாரணம் அறிவிப்பு ஏமாற்றமே!

பாதிப்பிற்கு தகுந்தார் போல் இழப்பீடு வழங்க

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயிகள், விவசாயத்

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெருக்கடியின் சுமை தாங்காமல் விவசாயிகள் அதிர்ச்சி சாவுகள் மற்றும் தற்கொலைகள்

அனுதினமும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ் நாட்டை வறட்சி பாதிக்கப்பட்ட

மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம்

அளித்திட வேண்டுமென விவசாய சங்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள வறட்சி நிவாரண உதவிகள் ஏமாற்றமளிப்பதாக

உள்ளது. குறிப்பாக மகசூல் அழிந்துள்ள நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5465, மானாவாரி

பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3000, நீண்டகால பயிருக்கு ஏக்கருக்கு ரூ.7287 என்பது

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்ய உதவாது. விவசாய கடன்களை தள்ளுபடி

செய்வதற்கு மாறாக மத்திய கால கடனாக மாற்றியிருப்பது விவசாயிகளுக்கு கூடுதல்

சுமையை ஏற்படுத்தும்.

அதிலும் கடந்த 2013ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்ட போது மாநில

பேரிடர் நிவாரண நிதி மற்றும் காவேரி சிறப்பு கூடுதல் நிவாரணம் மற்றும் காப்பீட்டு திட்டம்

சேர்த்து ஏக்கருக்கு ரூ.15,000 வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஏக்கருக்கு ரூ.

5465 மட்டும் வழங்கியதோடு பின்னர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியும்

என்று அறிவிப்பது பொருத்தமற்றது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை அரசு

கவலையுடன் பரிசீலிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே பயிர் இழப்புக்கு

உரிய நிவாரணம் வழங்கிட அரசு முன்வர வேண்டும்.

மேலும் வேலை வருமானமின்றி நெருக்கடியில் உழன்று வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கு

நிவாரணம் ஏதும் அறிவிக்காதது ஏழைகளை பற்றி அரசுக்கு அக்கறை இல்லை என்பதை

தெளிவுபடுத்துகிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 17 பேருக்கு நிவாரணம் அறிவித்துள்ள போதே

அவர்கள் பல காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது

அவர்களது மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இதர சாவுகள் குறித்து மாவட்ட

ஆட்சியர்களிடம் அறிக்கை பெற்று பின்னர் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது

வறட்சியால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி மரணங்களையும், தற்கொலையும் திரையிட்டு மூடி

மறைப்பதிலேயே தமிழக அரசு குறியாக உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே,

தாமதமில்லாமல் மரணமடைந்த இதர விவசாயிகளின் குடும்பங்களுக்கும் விரைவில் இழப்பீடு

வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரி, குளங்கள் தூர்வார ரூ. 3400 கோடி ஒதுக்கியுள்ளது முறைகேடின்றி முழுமையாக

செலவழிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தூர்வாரும் பணியில் விவசாயத்

தொழிலாளர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

எனவே தேசீய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலை என்பதை அனைத்து

கிராமங்களிலும் உடனடியாக அமல்படுத்த அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுப்பதுடன்,

விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 10,000/- வழங்க

முன்வருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

- ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Related Post

0 Komentar