பிரதமரை அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகளுடன் சென்று முதல்வர் சந்திக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

ஜல்லிக்கட்டு விவகாரம்:
பிரதமரை அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகளுடன் சென்று முதல்வர் சந்திக்க வேண்டும்
- எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் மாணவர்கள்-இளைஞர்கள் போராட்டம் வீரியம் அடைந்துள்ளதை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டத்திருத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளதால் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த நடவடிக்கை வரவேற்க்கதக்க முடிவாக இருந்தாலும், முன்னரே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும், பிரதமர் மோடியை சந்திக்கும் தமிழக முதல்வர், தமிழகத்தின் வலுவான அழுத்தத்தை மத்திய அரசிடம் பதிவு செய்யும் வகையில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய மற்றும் மாணவர் பிரதிநிதிகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலையில் உள்ளதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



இப்படிக்கு
ஏ.கே.கரீம்
மாநில ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு
தொடர்புக்கு: 9884655542

Related Post

0 Komentar