திமுகவின் வலிமையான அமைப்பாக இயங்குகின்ற இளைஞரணிக்கு செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக வலிமையான அணியாக இளைஞரணி பொறுப்பிலிருந்த இன்றைய செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 1980 -களில் திமுகவில் இளைஞர்களை அதிகமாக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த அணி உருவாக்கப்பட்டது. இப்போதும் இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களை அதிகமாக அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடும், முழு நம்பிக்கையோடும் திமுக செயல் தலைவர் அவர்கள் திரு.வெள்ளக்கோயில் சாமிநாதன் அவர்களை இளைஞரணி செயலாளராக நியமித்துள்ளார். திமுக செயல் தலைவர் எதிர்பார்ப்பின்படி திரு.வெள்ளக்கோவில் சாமிநாதன் தமக்குரிய பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி பல சாதனைகளை நிகழ்த்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Related Post
- தமிழக மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழா
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தமிழக முதல்வரை சந்தித்த புகைப்படம்
- தந்தி தொலைகாட்சிக்கு தமிழக எஸ்.டி.பி.ஐ. வாழ்த்து!
- நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க உறுதி மேற்கொள்வோம்! எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவரின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!
- முதலமைச்சர் பிரதமரை சந்திக்க செல்வது வரவேற்கதக்கது
- தந்தி டி.வி.க்கு விருது ஜி. ராமகிருஷ்ணன் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
0 Komentar