“ஒலி உரை வழி ஆவணமாக்கம்”

சென்னைப் பல்கலைக்கழத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் “ஒலி உரை வழி ஆவணமாக்கம்” தொடர்பான கருத்தரங்கம் துறைத்தலைவர் பேராசிரியர் கோபலன் இரவீந்திரன் அவர்களின் தலைமையில் இன்று (3/1/2017) துறையின் கலையகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மைய உரையை வழங்கினார்கள் ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலை
வர் முனைவர் சுபாஷினி அவர்கள்.

அவரது உரையில், “எது கலாச்சாரம்? நாம் மேலை நாடுகளில் உள்ளவர்களைப் பார்த்து விமர்சனம் செய்கிறோம். அவர்கள் கலாச்சாரத்துடன் இருப்பதில்லை. அவர்களின் உடைகள் மீதும், அவர்களின் நடவடிக்கைகள் மீதும் விமர்சனம் வைக்கும் நாம், அவர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை, அவர்கள் நாட்டில் உள்ள அருங்காட்சியங்களுக்கு நாம் சென்றால் தெரியும்”
மேலும் அவர்கூறும் போது, “நாம் இன்று நம்முடைய கலாச்சார முக்கியத்துவமான இடங்களில் நம்முடைய முத்திரையைப் பதிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறோம். ஆனால் அன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை வடித்த சிற்பியின் பெயர் எந்த கல்வெட்டிலும் பொறிக்கப்படவில்லை” என்றார்
முன்னதாக துறைத்தலைவர் பேரா.கோபாலன் இரவீந்திரன் உரையாற்றும் போது, “நாம் நமது கலாச்சாரத்தை படிப்படியாக மறந்து வருவதற்கு நம் மெரினா கடற்கரை உதாரணம். இங்கு எந்த மாதிரியான கட்டிடங்கள் இருந்தன. அவை இன்று எப்படியுள்ளன. அவற்றைப்பாதுகாப்பதில் நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பன போன்றவற்றை ஆராய வேண்டிள்ளது.” என்று கேள்வியெழுப்பினார்.
நிகழ்ச்சியில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறைப் பேராசிரியர்கள், முனைவர். பியூளா ரைச்செல், லியோ பெர்னான்டோ, முனைவர்.கலாவதி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ‘வானொலியும் நேயர்களும்’ என்ற கருத்தரங்க தொடரின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தங்க.ஜெய்சக்திவேல் ஏற்பாடு செய்திருந்தார்.
Previous
Next Post »
0 Komentar