விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் நிவாரணத்தொகை அறிவிக்கவேண்டும்

பத்திரிக்கை செய்தி                                  03.01.2017

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.
                    
கடந்த 30.12.2016 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உறுதியளித்த படி சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருப்பதை வரவேற்கிறோம்.  பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை பின்னர் முடிவுச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. 

இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாகுபடி  செய்த பயிர்கள் கருகிவிட்டதால் அதிர்ச்சியாலும்
, திருப்பி செலுத்த முடியாத கடன் சுமையால் தற்கொலை செய்துக்கொண்டு மரணமடைந்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கும் பயிர்பாதிப்புக்கும் வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் நிவாரணத்தொகை அறிவிக்கவேண்டும். அனைத்து பகுதிக்கும் தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்கவும்கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும்  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
Previous
Next Post »
0 Komentar