நாடே எதிர்பார்த்திருந்த நதிநீர் இணைப்பை பற்றி எந்த குறிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

தாக்கல் செய்யப்பட்ட வருகின்ற ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெறும் சம்பிரதாயத்திற்கு அரங்கேறியது போல இருக்கிறது. இந்தியாவில் இப்போது நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் குறிப்பிடும் படியான அறிவிப்புகள் ஏதுமில்லை. மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவது பற்றி நிதி அமைச்சரின் பேச்சில் இருக்கிறதே தவிர, நிதிநிலை அறிக்கையில் சாத்திய கூறுகளுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
நிதிநிலை அறிக்கையில் நாங்கள் வரவேற்கின்ற அறிவிப்புகள் :
1.       விவசாயத்திற்கு கொடுக்க கூடிய பயிர்க்கடன்களை ரூபாய் 10 லட்சம் கோடியாக உயர்த்தியிருப்பது.
2.       கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியிருப்பது.
3.       நாடு முழுவதும் குளிர்பதன கிடங்குகளை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியிருப்பது.
4.       அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை பெறுவதில் கட்டுபாடுகளை விதித்திருப்பது.
எதிர்பார்த்து ஏமாந்தது :
1.       நாடே எதிர்பார்த்திருந்த நதிநீர் இணைப்பை பற்றி எந்த குறிப்பும் இல்லாதது.
2.       சிறு தொழில்களை பாதுகாப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காதது.
3.       மத்திய தர மக்களுக்கான எந்த ஒரு சலுகையும் அறிவிக்காதது.
4.       நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற உற்பத்தி துறையை கண்டு கொள்ளாதது.
5.       தனிநபர் வருமான வரி விளக்கு அளவை உயர்த்தாதது.
6.       அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிநாட்டு இளைஞர்களுக்கு வேலைகள் கிடையாது என்ற நிலையை எடுத்திருக்கின்ற சூழ்நிலையில் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் வாக்குறுதியில் வரி தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று சொல்லி இருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்கான முயற்சி ஏதும் எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மொத்தத்தில் பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த அல்லது நாட்டை முன்னேற்றுகின்ற புரட்சிகரமான திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எந்தவொரு பரபரப்பான அறிவிப்பு இல்லாததாலோ என்னவோ நிதி அமைச்சரினுடைய பேச்சே பாராளுமன்றத்தில் ருசிகரமாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை பண மதிப்பு இழப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை சரி செய்ய உதவும் என்று மக்கள் நினைத்தது கனவாகி போனது.

Previous
Next Post »
0 Komentar