மதுரைக்கு அருகில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெற்ற
ஜல்லிக்கட்டு விளைபாட்டின் போது பொதுமக்களை காவல்துறையினர் மிகக்
கடுமையாகத் தாக்கி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரான வ.கௌதமன் உள்ளிட்ட பல தோழர்கள் ஆபத்தான நிலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக
முதலமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுகிறார் மறுபுறம் காவல்துறை
மக்களை தாக்குகிறது.இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொதிப்புணர்வை
ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.
தமிழகத்தில்
பல்வேறு இடங்களிவ் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதற்காக கைது
செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வற்புறுத்துகிறேன்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்
0 Komentar