தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பொங்கல் திருநாளை மத்திய அரசு விடுமுறை நாளாக ஏற்க மறுத்து
இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தொன்மைக் காலத்தில் இருந்தே அனைத்து
தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிற ஒரே திருநாள் பொங்கல் பெருநாள் ஆகும்.மற்ற
எல்லா விழாக்களும் ஏதாவது ஒரு சமயம் சார்ந்த விழாக்கள் ஆகும்.அனைத்து
சமயத்தினரும் கொண்டாடி மகிழ்கிற அறுவடைத் திருநாள் பொங்கல் திருநாள் ஆகும்.
ஏற்கனவே, சல்லிக்கட்டு விழாவிற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
இப்போது பொங்கல் திருநாளுக்கும் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கே உரிய பண்பாட்டு விழாக்களை சிதைக்க மத்திய அரசு முயல்வதை
வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்
0 Komentar