அண்ணாமலை பல்கலை. ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக ஊதியம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக டிசம்பர் மாத ஊதியத்தையும், பண்டிகை முன்பணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
12288நிதி முறைகேடுகள் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2013 ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் தற்போது 12,600 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பனிபுரிகிறார்கள். இவர்களுக்கு 2016 டிசம்பர் மாதத்துக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாததால் கடந்த 6 நாள்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் டிசம்பர் மாத ஊதியத்தையும் பண்டிகை முன்பணத்தையம் சேர்த்து பொங்கலுக்கு முன்பாக வழங்த வேண்டியது தமிழக அரசின் கடமை.
மேலும் பல்கலைககழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு கால தாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Post

0 Komentar