முதலமைச்சர் பிரதமரை சந்திக்க செல்வது வரவேற்கதக்கது

ஜல்லிக்கட்டை நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாணவர்கள் - இளைஞர்கள் பொதுமக்கள் தொடர்ந்து தீவிரமாக போராடி வருகின்றார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை சந்திக்க இன்று டெல்லி செல்வது வரவேற்கதக்கது. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த    உணர்வுக்கும் மத்திய அரசு உரிய மதிப்பளித்து முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்திட சட்டப்பூர்வ அனுமதியை வழங்கிட முன்வர வேண்டுகிறோம்.
முதல்வரின் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்திட வாழ்த்துக்கள்.
இந்நிலையில், மெரினாவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும் - மாணவர்களையும் அப்புறப்படுத்திட மேற்கொண்டுள்ள முயற்சியை காவல்துறை கைவிட வேண்டுமென கேட்டுக்  கொள்கிறோம்.
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
 -- 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு
------
CPI TAMIL NADU
State Council

Related Post

0 Komentar