தமிழகத்தில் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்திட
அவசரசட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக மாணவர்களும், மக்களும், அரசியல் கட்சிகளும், தங்கள் உணர்வுகளை
வெளிப்படுத்தி வரும் வேலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமியும், பீட்டா அமைப்பைச்
சார்ந்தவர்களும் அவசரசட்டம் கூடாது என்றும், மீறி தமிழகத்தில் ஜல்லிக் கட்டு
நடைபெற்றால் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று கூறுவதும்,
தமிழக பாஜக தலைவர்
தமிழிசை போன்றவர்கள் தமிழக ஆட்சியை எங்களிடம் தாருங்கள் என்பதும், ஜனநாயகத்தின் மீதும்,
மக்களால் தேர்வு
செய்யப்பட்ட அரசாட்சியின் மீதும் தொடுக்கப்டும் அப்பட்டமான தாக்குதல் என இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இத்தகைய கருத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
வன்மையாக கண்டிக்கிறது.
ஜல்லிக்கட்டு தமிழ்மக்களின்
கலாச்சாரத்தையும், தொன்மைகளையும் வெளிபடுத்துவதோடு மாட்டினங்களை பேணிவளர்பதாகும். இதனை சந்தை
அரசியலோடும் பரபரப்பு அரசியலோடும் நெருக்கமாக உள்ளவர்களால் தமிழ்மரபுகளையும் அதன்
நுட்பமான வேர்களையும் அறியமுடியாது. இப்படிப்பட்டவர்கள் அமைதியாக இருப்பதே
நல்லது.மாறாக ஆட்சி கலைப்பு, ஜனாதிபதி ஆட்சி என பரபரப்பு அறிக்கைகளை வெளியிடுவது கடும்
கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு
கருதுவதோடு, ஜல்லிக்கட்டு நடைபெற உரிய அழுத்தங்களை, நிர்பந்தங்களை மத்திய மாநில அரசு தரவேண்டும் என கேட்டுக்
கொள்கிறது.
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
0 Komentar