தனிநபர் வருமான சராசரியில் முதலிடம் வகிக்கும் டெல்லி: மத்திய அரசு

டெல்லி: தனிநபர் பெறும் வருமானத்தில், சராசரி அளவில் இந்தியாவில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தனிநபர் வருமானம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தலைநகர் டெல்லி 2015-16ஆம் ஆண்டில் ரூ.2,80,000 சராசரி வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சண்டிகர் ரூ.2,42,386 மற்றும் சிக்கிம் ரூ.2,27,465 தனிநபர் வருமானங்களுடன் 2வது, 3வது இடங்களில் உள்ளன.


டெல்லியின் நடப்பாண்டில் தனிநபர் சராசரி வருமானம், கடந்த ஆண்டை விட ரூ.28,000 அல்லது 13% அதிகம் ஆகும். இதற்கிடையில் டெல்லி துணை முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய விலைவாசிப்படி தனி நபர் வருமானம் ரூ.2,80,142 என்றும், இது கடந்த ஆண்டை விட ரூ.28,131 அதிகம் என்றும் கூறியுள்ளார்.

தேசிய அளவில் 2015-16ஆம் ஆண்டின் தனி நபர் வருமான சராசரி ரூ.93,293 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் பொருளாதார தலைநகராக மும்பையை பின் தள்ளி, டெல்லி இடம்பிடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது.

Previous
Next Post »
0 Komentar