இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்!! பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் டி.யூ.ஜெ.வின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நமது டி.யூ.ஜெ. தோழர்கள் அனைவருக்கும், தமிழகத்திலுள்ள பத்திரிகையாளர் தோழர்கள், சக பத்திரிகையாளர்கள் சங்கங்கள்  மற்றும் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 2017&புத்தாண்டு மற்றும் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2016ம் ஆண்டு அனைவருக்கும் துயரம் நிறைந்த ஆண்டாக கடந்தது. இந்த பூஉலகில் சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவத்தை நிலைநிறுத்தி சுரண்டல் இல்லாத சமூக அமைப்பை உருவாக்கிய மாவீரன் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு, ஆண் ஆதிக்க சமூகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பாலின பாகுபாடுகளை உடைத்தெரிந்து பல லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் தலைவராக பொறுப்பேற்று 30 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு, கட்சியை கட்டிகாத்து, தமிழக முதல்வராகவும் 3முறை பதவி வகித்து மறைந்த ஜெயலலிதா அவர்களின் மறைவு, பல்வேறு கொள்கை வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதபோக்குகளை தனது துக்ளக் பத்திரிகை மூலம் தோலுரித்து காண்பித்ததால் மத்திய&மாநில அரசுகளால் துக்ளக் பத்திரிகைக்கு தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த செயலை எதிர்கொண்டு துணிச்சலாக போராடியவர்
.

அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக இடதுசாரி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து எதிர்த்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்களின் மறைவு ஆகியவை கடந்த ஆண்டின் சோகத்தின் சில துளிகள்.
மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பால் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த கொடுமை வறட்சியினால் தமிழகத்தில் 40 விவசாயிகளும், நாடுமுழுவதும் சுமார் 300க்கும் அதிகமான விவசாயிகளும் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் (30.12.2016) வெள்ளியன்று மட்டும் 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது மத்திய, மாநில அரசுகளின் கையலாகாத கொள்கைகளின் விளைவாகும்.
இது மட்டுமல்லாமல், புயல், வெள்ளம், போர், இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகி எண்ணற்ற உயிர்கள் பலியாகியுள்ளன.
உலகம் முழுவதும் தீவிரவாதத்தை எதிர்த்த மனித உரிமை மீறலை எதிர்த்த, இன, மத துவேஷங்களை எதிர்த்த காரணத்தாலும், மலை வாழ்மக்களின் உரிமைகள் பாதுகாக்கவும், பல ஊழல்களை அமல்படுத்தியதாலும் பத்திரிகையாளர்கள் தமது இன்னுயிரை ஈந்துள்ளார்கள்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக பிரச்சனையில் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திய மாணவர் அமைப்பு தலைவர் தேச விரோதி என்ற முத்திரை குத்தி தவறாக ஊடகத்தில் சித்திரிக்க மத்திய அரசு முயன்ற செய¬லை கண்டித்து தனியார் டி.வி.யின் நிர்வாக ஆசிரியர் ராஜினாமா செய்த நிகழ்ச்சி, மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைப்பின் குறைபாட்டை தகலறியும் சட்டப்படி பெற்று அம்பலபடுத்திய பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியும், தமிழக அரசை விமர்சனம் செய்ததால் பல்வேறு அவதூறு வழக்குகளை தமிழக பத்திரிகை உலகில் சந்தித்தது. அது மட்டுமல்லாமல் இந்த அவதூறு வழக்குகளுக்காக உச்சநீதிமன்றமே தமிழக அரசை கண்டித்த அவலத்தையும் கடந்த ஆண்டுகள் கண்டோம்.
மேலும் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தங்களின் கடமைகளை செய்ய விடாமல் காவல் துறை, அரசியல்வாதிகள், சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட பல சம்பவங்களையும் 2016&ம் ஆண்டில் கண்டோம்.
இந்தியா முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களில் 10% பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே சட்டபூர்வ ஊதியக்குழு சம்பளம் கிடைக்கிறது. மீதி 90%பேர் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காமல் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலைமையே உள்ளது.
ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களில், சங்கங்களின் மூலமாக திரட்டப்பட்டவர்கள் 25% பேர்கள் தான். மீதி 75% பேர்கள் உதிரியாக உள்ளார்கள்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பெறும் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தை கூட 90 சதவீத பத்திரிகையாளர்கள் பெற முடியாத நிலை உள்ளது. எனவே குறைந்தபட்ச பத்திரிகையாளர் ஊதியத்தை 20 ஆயிரமாக நிர்ணயிக்க டியூ.ஜெ. வலியுறுத்தி வருகிறது.
நமது ஆசான் மகாகவிபாரதி, நமது நாடு சுதந்திரம் அடையவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் போராடிய அதே வேளையில் சமூக அவலங்களை போக்கவும் தமது எழுதுகோலை பயன்படுத்தினான். எனவே, பத்திரிகையாளர்களாகிய நாம் பத்திரிகையாளர்கள் உரிமைகளுக்காக போராடும் அதே வேளையில் சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்க பாரதி வரிகளில் “இனி ஒரு விதி செய்வோம்”, அதை குறைந்தபட்ச செயல் திட்டமாக வைத்து அனைத்து சங்கங்களின் துணையோடு கூட்டு போராட்டங்கள் மூலம் வென்றெடுப்போம்!.
எனவே, கடந்த காலத்தை ஒப்பிடும்போது பத்திரிகையாளர்களுக்கு “2017&ம் ஆண்டு” என்பது ஒரு சவால் மிக்க ஆண்டாக நம் முன்பு உள்ளது.
எனவே பத்திரிகையாளர் தோழர்களே! ஊடகங்களை பாதுகாக்கவும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், ஊடகவியலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் ஸ்தாபனமாக(சங்கமாக) ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! நம் உரிமைகளை வென்றெடுப்போம்!!! வாரீர் தோழர்களே!
டி.யூ.ஜே. தோழர்களே, உங்களின் உறுப்பினர் சந்தாவை புதுப்பியுங்கள், புதிய (சரியான&நேர்மையான) உறுப்பினர்களை தமிழகம் முழுவதும் சேருங்கள் என்று தங்களை அன்புடன் அழைக்கிறேன் வாழ்த்துக்களுடன். பி.எஸ்.டி.புருஷோத்தமன்.
இவ்வாறு டி.யூ.ஜெ. மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Previous
Next Post »
0 Komentar