09.01.2017
மத்திய அரசு பொங்கல் தினத்தை விருப்ப விடுமுறை தினமாக
அறிவித்ததை பொது விடுமுறை தினமாக மாற்ற
டி.கே. ரங்கராஜன் எம்.பி., கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை
உறுப்பினருமான தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., அவர்கள் மத்திய அமைச்சர் டாக்டர்
ஜித்தேந்திர சிங் அவர்களுக்கு பொங்கல் தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க
கோரி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்;
தமிழகத்திற்கு பொங்கல் மிக முக்கியமான பண்டிகையாகும். மத்திய அரசின் 2017ம்
ஆண்டிற்கான விடுமுறைகள் தினப் பட்டியலில் ஜனவரி 14 பொங்கல் தினம் பொது விடுமுறை
தினமாக அறிவிக்கப்படவில்லை. மாறாக விருப்ப விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகாறும் பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாகவே அறிவிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த ஆண்டில் பொங்கல் தினம் சனிக்கிழமையில் வந்தாலும் தபால் நிலையங்கள்,
பாதுகாப்புத் துறையின் அலுவலகங்கள், மத்திய சுகாதாரத்துறை திட்ட அலுவலகங்கள்
போன்ற மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்குவதை தாங்கள்
அறிவீர்கள்.
தமிழக மக்கள் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பொங்கல் திருநாள் தமிழக மக்களின்
மிக முக்கியமான திருநாளாகும். எனவே பொங்கல் தினத்தை தமிழகத்தில் பொது விடுமுறை
தினமாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
- டி.கே. ரங்கராஜன் எம்.பி.,

0 Komentar